அடக்கொடுமையே! விவஸ்தை இல்லாம இப்படியெல்லாமா பேனர் அடிப்பாங்க.!

தற்காலத்தில் திருமணம், காதணி விழா தொடங்கி மஞ்சள் நீராட்டு விழா உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் கட்அவுட்கள் அடிக்கும் பழக்கம் பெருமளவில் நடைமுறையில் உள்ளது. மேலும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவோருக்கு பல வசனங்களோடு பேனர்கள் அடித்து வருகின்றனர்.

மேலும் இவ்வாறு ஆங்காங்கே வைக்கப்படும் பேனர்களில் சில தருணங்களில் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டாலும் அதனை குறித்து எவரும் பொருட்படுத்துவதில்லை.

இவ்வாறு விழாக்களுக்கு அடிக்கப்படும் பேனர்களில் நடிகர் நடிகைகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் போன்றவற்றை போட்டு வித்தியாசமாக அச்சிட்டுவருகின்றனர். மேலும் அவற்றில் இடம்பெறும் வசனங்களும் மிகவும் வித்தியாசமாக அச்சிடப்படும்.

அவ்வாறு அச்சிடப்படும் வசனங்கள் பார்ப்போரை பெருமளவில் கவர வேண்டும் என என்னடில் பலரும் பெருமளவில் யோசித்து அசரும் வகையிலும் வசனங்களை அச்சிடுகின்றனர். சிலர் எதிர்மறையான விமர்சனங்களை கூறும் வகையில் மோசமாக அச்சிடுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திருமண வீட்டில் ஒன்றில் வைக்கப்பட்ட பேனரில் இடம்பெற்றுள்ள வாசகம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அந்த திருமண பேனரில் உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கும்தான் பொண்டாட்டி என அச்சிட்டுள்ளனர். பார்ப்போரை முகம்சுளிக்க வைத்துள்ளது.