திருமணப் பொருத்தம் என்றால் என்ன?

திருமணப் பொருத்தம் :

ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் திருப்பு முனையாக இருப்பது திருமண பந்தம்தான். திருமணம் என்பது மனப்பூர்வமாக மணமகனையும், மணமகளையும் இணைப்பதாகும். சிறப்பான துணை யார் என்பதை அறிய திருமண பொருத்தங்கள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டன.

திருமணத்தின்போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பனிரெண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.

பொதுவாக நம் நாட்டில் திருமணம் செய்துகொள்ள போகின்ற ஆணின் ஜாதகத்தையும், பெண்ணின் ஜாதகத்தையும் வைத்து பொருத்தம் பார்த்த பின்பு, நம் பாரம்பரிய முறைப்படியான தசவிதப் பொருத்தங்கள் இருந்தால் திருமணம் நிச்சயம் செய்கிறோம்.

திருமண பொருத்தத்தில் மிக முக்கிய பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்று கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.

திருமணப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

ஜாதக பொருத்தம் என்பது பல காலமாக நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையான பழக்கம் ஆகும்.

மனிதனின் பிறப்பு ஜாதகம் அவனது குண நலன்களை கூறுகிறது. ஜாதகத்தை பார்த்து கூடுமானவரை ஒருவரைப் பற்றி கணிக்க இயலும். எனவே திருமணத்திற்கு முன்பு ஜாதகம் பார்ப்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. ஜாதகத்தில் குணநலன், வேலை, வசதி வாய்ப்புகள், ஆயுள், நோய், உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் ஓரளவு கணிக்க இயலும்.

பொருத்தம் பார்க்கும் விஷயத்திலும் பெண்ணுக்குத்தான் ஜோதிடத்தில் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய நட்சத்திரத்தைக் கொண்டுதான், ஆணுடைய நட்சத்திரத்தோடு அது பொருந்தி வருகிறதா என்று பார்ப்பர். எல்லா நட்சத்திரங்களும் எல்லோருக்கும் பொருந்தாது. அதற்குத்தான் திருமணபொருத்தம் பார்க்கப்படுகின்றது.

நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை எப்படி விளம்பரப்படுத்துவது? என யோசித்து கொண்டு இருக்கிறீர்களா? எங்கள் நித்ரா வேலைவாய்ப்பு செயலி மூலம் உங்களுக்கு தேவையான பணியாட்களை எளிதில் நிரப்பிக்கொள்ள முடியும்.

உங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் வேலைவாய்ப்பு தகவல்களை விளம்பரப்படுத்த மற்றும் தெரிவிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்.

எங்களது வேலைவாய்ப்பு செயலியை தரவிறக்கம் செய்ய,

12 பொருத்தங்கள் :

* தினப் பொருத்தம்

* கணப்பொருத்தம்

* மகேந்திரப் பொருத்தம்

* ஸ்திரீ தீர்க்கம்

* யோனிப் பொருத்தம்

* இராசிப் பொருத்தம்

* இராசி அதிபதி பொருத்தம்

* வசியப் பொருத்தம்

* ரஜ்ஜிப்பொருத்தம்

* வேதைப் பொருத்தம்

* நாடிப் பொருத்தம்

* விருட்சப் பொருத்தம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 பொருத்தங்களில் முதல் 10 பொருத்தங்களே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.