சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த இளைஞர்!

பாகிஸ்தானில் திருமணத்தை நிராகரித்த சிறுமி மீது தீ வைத்து, கொலை செய்ய முயற்சித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த மிஸ்பா என்கிற 16 வயது சிறுமி திடீரென நள்ளிரவு 1.30 மணியளவில் அலற ஆரம்பித்துள்ளார்.

சத்தம் கேட்டு எழுந்த சிறுமியின் தாய் மகளின் உடல் முழுவதும் தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அந்த இடத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் தப்பி செல்வத்தையும் பார்த்துள்ளார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயை அணைத்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இடத்தில் கண்டெடுத்த பர்ஸ், புகைப்படம், மற்றும் பணத்தை பொலிஸாரிடம் சிறுமியின் தாய் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், யூசுப் என்கிற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் திருமணத்திற்கு பெண் கேட்டதாகவும், அதற்கு சிறுமியின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், தீ வைக்கப்பட்ட சிறுமியின் முகம், கை மற்றும் கால்கள் மீது படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.