கர்ப்பமாக இருந்த என்னை படுக்கைக்கு அழைத்தனர்.!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான சமீரா ரெட்டி., கடந்த 1980ம் வருடம் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் இந்தி திரையுலகின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இந்தியில் வெளியான “maine dil tujhko diya” என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்., அஜித் நடித்த “சிட்டிசன்” திரைப் படத்திலும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

தனது நடிப்பின் மூலமாக இந்தி., தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த நிலையில்., கடந்த 2014 ஆம் ஆண்டு அக்சய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது நான்கு வயதுடைய குழந்தை உள்ள நிலையில்., தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

இந்த நிலையில்., சமீரா தனது திரை வாழ்க்கை குறித்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த பேட்டியில்., கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திரைத்துறையை விட்டு வெளியேறினேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து வெளியேறினேன் என்பதை தெரிந்துகொள்ள ஒரு வருடம் ஆர்வம் காட்டாத நிலையில் திரையுலகமே இப்படித்தான் இருக்கிறது என்று கூறி நான் இந்த முடிவை எடுத்தேன்.

நான் திரையுலகை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக பெண்களுக்கு இந்த துறை பாதுகாப்பில்லை., பலமுறை நடிகர்கள்., இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என்று என்னை படுக்கைக்கு பலவந்தமாக அழைத்தனர். நான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தும் என்னை படுக்கைக்கு அழைத்து சிலரும் இங்கு இருக்கிறார்கள். இதன் காரணமாக நான் திரைத்துறைக்கு விலக்கம் அடைந்தேன் என்று கூறினார்.