எதிராக ஆவேசத்துடன் களமிறங்கிய பாடகி சின்மயி! அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்!!

சமீப காலமாக பெண்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து மீ டூ என்ற ஹேஷ்டாக் மூலம் பகிர்ந்து வருகின்றனர், மேலும் இது குறித்து பெண்களுக்கு ஆதரவாக பாடகி சின்மயி நீதி கேட்டு குரல் எழுப்பி வருகிறார்.

இந்நிலையில் இந்த மீடுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மூவர் குழு பாலியல் புகார் குறித்த தக்க ஆதாரம் எதுவும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு நலன் கருதி தீவிரமாக செயல்பட்டு வரும் சின்மயி, தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் மேற்கொள்ள அனுமதி கேட்டு பாடகி சின்மயி சென்னை காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சின்மயிக்கு அனுமதி மறுத்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.