உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகர் அமித்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் அமித் பார்கவ். அதனை தொடர்ந்து அவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சிவரஞ்சினிக்கு கடந்த 7 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர் அமித் பார்கவ் மிகவும் மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் குழந்தையுடைய பிஞ்சு கையின் புகைப்படத்தை வெளியிட்ட அமித் அதனுடன் மே 7 ஆம் தேதி எனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை அட்சய திருதியை அன்று மகாலட்சுமியின் முழு ஆசிர்வாதத்துடன் பிறந்துள்ளது. எனது சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன், ஆனால் கிடைக்கவில்லை என மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.