யாழில் தேவாலயத்தை நோட்டமிடும் வகையில் திரிந்த மௌலவி உள்ளிட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ். குருநகர் சென். ஜேன்ம்ஸ் தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மௌலவி உள்ளிட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர். மற்றவர் புல்லோட்டைப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் மௌலவியாக உள்ளார்.

சந்தேகநபர் தான் மௌவி என்று விசாரணையில் சொல்லவில்லை. அவர்கள் தமது வதிவிடம் தொடர்பான உறுதிப்படுத்தலையும் முன்வைக்கவில்லை என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.