முக்கிய வீரர் நீக்கமா?? அடுத்த ஆட்டத்தில் நடக்கவிருக்கும் மாற்றங்கள்!!

ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் நேற்று மோதியது. பரபரப்பாக போன நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி போராடி கடைசி ஓவரில் வென்றது.

இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

இந்த சீசனில் சென்னை அணியின் அதிரடி வீரர் வாட்சன் ஒரு போட்டியை தவிர வேறு எந்த போட்டியிலும் சொல்லும் அளவிற்கு ஆடவில்லை. சென்னை அணிக்கு துவக்க வீரர்கள் சொதப்பலாக இருப்பதால் அடுத்த போட்டியில் வாட்சன் நீக்கப்பட்டு முரளி விஜய் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல் சென்னை அணியில் தீபக் சாகர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் மோகித் சர்மா, ஸ்காட் குகேஜிலின் ஆகிய இருவரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.