பிளாஷ்டிக் பொம்மையை விழுங்கி பிரபல நடிகரின் மகள் மரணம்..

தொலைக்காட்சி நடிகர் பிரதிஷ் வோராவின் 2 வயது மகள் பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கியதால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் பிரதிஷ் வோரா. அவருக்கு 2 வயதில் மகள் இருந்தார். அவர் கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் பொம்மையை வைத்து விளையாடியுள்ளார். அப்பொழுது எதிர்ப்பாராத விதமாக ஒரு பிளாஸ்டிக் பொம்மையை குழந்தை விழுங்கிவிட்டது.

 

View this post on Instagram

 

Cuteness overloaded 😘 #cutebabies #family #indiancutebaby #littlebaby #cutiepie #babygirl #cutenessoverload

A post shared by Pratish Vora (@vorapratishofficial) on

பொம்மை குழந்தையின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்துவிட்டது. இதை நடிகர் பிரதிஷ் வோரா உறுதி செய்துள்ளார். மேலும் தனது குழந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

குழந்தையின் உடல் மும்பையில் இருந்து விமானம் மூலம் ராஜ்கோட் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. குழந்தையை இழந்து வாடும் பிரதிஷுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Stay fit.. do it daily.. learn from me 😜😘#hamfittohindiafit #cutebabies #fitnessmotivation #lovelydaughter #gymtraining #scoobydoopapa

A post shared by Pratish Vora (@vorapratishofficial) on