நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா??

இயக்குனர் அர்ஜுன் காமராஜ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு மற்றும் பிளேடு ஷங்கர், முனிஷ்காந்த ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் கனா. இப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன.

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் மற்றொரு கதைக்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் வகையிலான குடும்ப பெண்கள் ரோல்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்துவருபவர். காக்க முட்டை, தர்மதுரை, கானா என பல படங்களில் அவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்தவர்கள் ஏராளம். தற்போது 29 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா நடிகர் ஒருவரை தான் அவர் காதலித்து வருகிறாராம். ஒரு முக்கிய படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் காதலிக்கிறார் என்றும், குடும்பத்தினர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் என்று சினிமா வட்டாரங்கள் அரசல் புரசலாக பேசிவருகின்றனர்.