கோடிக்கணக்கில் மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கையில் மிதந்த இளம்பெண்!

அண்ணா டெல்வே என்கிற பெயரில் போலியாக நடித்து பல கோடிக்கணக்கில் மோசடி செய்த ஜெர்மனை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 4 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்யாவில் பிறந்து ஜேர்மன் குடிமகளான Anna Sorokin (28) என்கிற இளம்பெண், தன்னுடைய விசா காலம் முடிவடைந்த பின்னரும் கூட அமெரிக்காவில் தங்கியிருந்துள்ளார்.

அண்ணா டெல்வே என்கிற பெயரில் போலியாக நடித்த Sorokin, வங்கி, ஹோட்டல்கள், நண்பர்கள் என பலரையும் ஏமாற்றி கிட்டத்தட்ட பல கோடிக்கணக்கில் மோசடி செய்து நியூயார்க்கில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

இவரை கடந்த 2017ம் ஆண்டு கைது செய்த பொலிஸார், தீவிரமான விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, Anna Sorokin-விற்கு 4 முதல் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 24,000 டொலர்கள் அபராதமாக விதித்தார்.

மேலும், மோசடி செய்த சுமார் 200,000 பவுண்டுகளை திருப்பி செலுத்துமாறு கூறினார். அமெரிக்காவில் தண்டனை காலம் முடிந்த பின்னர், Anna Sorokin ஜேர்மனிற்கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.