கணவனை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே 3 நாட்கள் மறைத்து வைத்த கொடூரம்.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவியின் பெயர் பாண்டீஸ்வரி. இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ள நிலையில்., இரண்டு வீடுகள் அடுத்தது சொந்த வீடுகளாக உள்ளது.

இவர்கள் இந்த இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வசித்து வந்த நிலையில்., கடந்த மூன்று நாட்களாக திடீரென ஒரு வீட்டில் மட்டும் பாண்டீஸ்வரி வசித்து வந்த நிலையில்., அந்த மற்றொரு வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இந்த நிலையில்., அக்கம் பக்கத்தினர் ஆறுமுகம் குறித்த விசாரணை செய்த சமயத்தில் அவர் வெளியூருக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் கணவர் வெளியூருக்கு சென்றதால் இந்த வீட்டில் இருக்கிறார் என்று எண்ணியுள்ளனர்.

இந்த நேரத்தில்., பூட்டப்பட்டு இருந்த இல்லத்தில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியதை அடுத்து., வீட்டின் சாவியை வாங்கி திறந்து பார்த்துள்ளனர். இவர்கள் வீட்டின் கதவை திறந்தவுடன் ஆறுமுகம் சடலமாக அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு உடனடியாக தகவலை தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர்., ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாண்டீஸ்வரியிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின்னர் முரணாக பதிலளிக்கவே., சந்தேகமடைந்த காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்., மதுப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்த ஆறுமுகத்தின் தொல்லை தாங்காமல் கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் கொலை செய்யப்பட்டதற்கு இது தான் உண்மையான காரணமாக என்பது குறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.