ஒரே கூண்டுக்குள் இருந்து காதலிக்கும் நாயும் நரியும்.. !!

சீனாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், நரியின் கூண்டில் நாயை அடைத்து வைத்து, பார்வையாளர்களுக்கு காட்டியது தெரியவந்துள்ளது.சீனாவில் ஊஹான் பகுதியில், அடர்ந்த வனத்தில் இருக்கும் உயிரியல் பூங்கா ஜியூபெங்க். இந்த உயிரியல் பூங்காவில் நரியின் கூண்டில் நாய் ஒன்று இருப்பதாக பார்வையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போட்டோ ஒன்றும் வெளியாகி வைரலானது.இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உயிரியல் பூங்கா நிர்வாகம், தாங்கள் பார்வையாளர்களை ஏமாற்றவில்லை என தெரிவித்துள்ளனர். அந்த கூண்டில் நரி ஒன்று இருப்பதாகவும், பார்வையாளர் வந்த அன்றைய தினத்தின்போது, அந்த நரி உறங்கிகொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கோபக்கார நரி: மேலும், சம்மந்தப்பட்ட கூண்டில் அடைக்கப்பட்டுள்ள நரி ஒரு பொல்லாத நரி என்றும், மற்ற ஆண் நரிகளுடன் அடிக்கடி சண்டைக்கு போவதால் தான் அதனை தனிக் கூண்டில் அடைத்து வைத்துள்ளதாகவும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் நாய்கள்:நரிக்கு கம்பெனி தருவதற்காக இரண்டு பெண் நாய்களை அந்த கூண்டில் அடைத்ததாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவை அந்த கூண்டில் தான் இருக்கிறது என்றும் ஊழியர்கள் கூறினர். மேலும், அந்த இரண்டு நாய்களில் ஒரு நாய், நரியுடன் நெருங்கி பழகுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாய்க்கும் நரிக்கும் காதல்:

அதனால் ஒரு நாயை வெளியே எடுத்துவிட்டு, தற்போது ஒரு நாயும், ஒரு நரியும் அந்த கூண்டில் ஒன்றாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவை இரண்டும் காதலிக்கின்றன என்றும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் சீனாவையும் தாண்டி காட்டித்தீயாக பரவி வருகிறது. நாயைக் காட்டி இத்தனை நாள் நரி என பார்வையாளர்களை ஏமாற்றி விட்டு, தற்போது மாட்டிக் கொண்டதும் ஏதேதோ கதை விடுவதாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.