அதிரடி புகாருக்கு, அமைதியாக பார்த்திபன் வெளியிட்ட ஒற்றை பதிவு!!

நடிகர் பார்த்திபனுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தவர் ஜெயம் கொண்டான். இவர் பார்த்திபன் மீது கொலை முயற்சி புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருவான்மியூரில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டில் நகைகள் காணாமல் போனது. அதனை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் உதவி இயக்குனர்கள் மற்றும் உடன் வேலை செய்த உதவியாளர்கள் பலரை பார்த்திபன் வேலையை விட்டு நீக்கினார்.

இதனை தொடர்ந்து பார்த்திபனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் ஜெயம்கொண்டான். இவர் நகைதிருட்டில் ஈடுபட்டுள்ளதாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட சிலரிடம் தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் போர் பிரேம் திரையரங்கிற்கு தாம் சென்றதாகவும்,அங்கு வந்த நடிகர் பார்த்திபன் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியுடன் தன்னை தாக்கியதாகவும், மேலும் திரையரங்கின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட முயற்சி செய்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார். மேலும் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நகை திருட்டில் ஜெயம்கொண்டானுக்கும் தொடர்பு உள்ளது என்பதை தான் கண்டறிந்ததால் அவர் இவ்வாறு பொய் வழக்கை போடுகிறார் என நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.