மகன் கொடூரமாக கொல்லப்படும் வீடியோவை பார்த்து நீதிமன்றத்திலே கதறி அழுத தாய்!

அமெரிக்காவில் மகன் கொலை செய்யப்படும் வீடியோவை பார்த்த தாய் ஒருவர் நீதிமன்றத்திலே கதறி அழுதுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த Lesandro என்கிற 15 வயது சிறுவன், கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் திகதியன்று 15 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான்.

அமெரிக்காவை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையின் போது, Lesandro கொடூரமாக கொலை செய்யப்படும் வீடியோ காட்சியானது நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது.

அதனை நேரில் பார்த்த Lesandro-வின் தாய் Feliz நீதிமன்றத்திலே கதறி அழ ஆரம்பித்தார். நான் என் கண்களை மூடிக்கொண்டேன் … என்னை சித்திரவதை செய்து உயிருடன் கொன்றது போல் இருந்தது என அவர் கூறினார்.