துப்பாக்கியுடன் வகுப்பறைக்கு வரலாம்..

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு துப்பாக்கியுடன் வரலாம் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

புளோரிடா மாகாணத்தின் கவர்னர் ரான் டெ சாண்டிஸ் குறித்த சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார். இம்மாகாண பள்ளிகளில் அதிகரித்து வரும் துப்பாக்கி தாக்குதல்களை கருத்தில் கொண்டே குறித்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

எனினும், ஆசிரியர்கள் துப்பாக்கி ஏந்த உளவியல் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், 144 மணிநேர பொலிஸ் பயிற்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள 67 மாவட்டங்களில் 40 மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் துப்பாக்கி பயிற்சியில் கலந்துகொள்ள முன்வந்துள்ளனர்.