ஜோடியாக கிணத்தில் குதித்த சிறுவர், சிறுமி!! பெற்றோர் கதறல்!!

கீழகல்பூண்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் அபிராமி(16) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு மகன் சிவரஞ்சன் (வயது 18) என்பவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.

இவர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இருவரும் விடுப்பில் இருந்ததால் பொது இடத்தில் சந்தித்து வந்துள்ளனர்.

அவர்களது பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிந்து எதிர்ப்புத்தெரிவிக்கவே நேற்று முன்தினம் மாலை சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரில் உள்ள சேர்ந்த வேந்தன் என்பவரது விவசாய நிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் அங்கு வந்த வேந்தன் இருவரையும் விரட்டவே அங்கிருந்து கிளம்பியுள்ளனர். பின்னர் அவரது பெற்றோர் இருவர்களையும் காணவில்லை என தேடவே வேந்தனுக்கு தெரிந்து அவர் மீண்டும் வந்து நிலத்தில் பார்க்க கிணற்றின் அருகே இருசோடி செருப்பு கிடந்துள்ளது.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்க்கையில் கிணற்றில் இருவரது பிணமும் கிடந்துள்ளது. அவர்களது உடலை மீட்டுள்ளனர். பெற்றோர் இதனை பார்த்து கதறி அழுது வருகின்றனர்.