செயற்கை கால்… தன்னம்பிக்கையுடன் ஆடும் சிறுவன்!

ஆப்கானிஸ்தானில் செயற்கை கால் பொருத்தப்பட்ட சிறுவன் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக ஆடிய காட்சிகள் பலருக்கு கண்ணீர் வரவழைக்க செய்துள்ளது.

அகமது என்ற சிறுவன் தன் பிறந்த 8வது மாதத்தில், தாலிபானுக்கும் அமைப்பிற்கும், ஆப்கானிதான் அரசுக்கும் இடையே நடந்த மோதலில் குண்டு துழைத்து தனது வலது காலை இழந்துள்ளான்.

இதற்கு முன்னதாக நான்கு முறை அவனுக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளது.எனினும் சிறுவனின் வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது புதிய செயற்கைகால் மருத்துவர்கள் பொருத்தி உள்ளனர்.

இந்நிலையில் கால்கள் பொருத்தப்பட்ட சிறுது நேரத்தில் பல நோயளிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் அகமது நடனமாடி உள்ளான். அந்த காட்சியில் சுற்றிநிற்கும் மருத்துவர்கள் அவனை ஆச்சரியமுடன் பார்கின்றனர்.

இந்நிலையில் இந்த காட்சி இணையத்தில் பதிவிட்ட சிலமணி நேரத்தில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும், அவனின் முயற்சிக்கு பலரும் வாழ்த்துகளும்,தங்களுக்கு கண்ணீர் வரவழைப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.