சென்னை அணியின் தோல்விக்கு காரணம்..??? – தோனி

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவுற்று பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நேற்று முதல் ஆரம்பம் ஆகின்றன. லீக் ஆட்டங்களில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று விளையாடியது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய டு பிளேஸிஸ் 4 ரன்களும், வாட்சன் 10 ரன்களும் எடுத்து வெளியேறினர். ரெய்னாவும் 5 ரன் இறுத்து வெளியாதல், சென்னை அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது

ராயுடு மற்றும் தோனி இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். இருந்தாலும் போதிய ரன்களுக்கு எடுத்து செல்லவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விகெட்டுகளை இழந்த சென்னை அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எளிய இலக்குடன் களத்தில் இறங்கிய மும்பை அணி 4 விக்கெட்டை இழந்து 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதி போட்டிக்கு நுழைந்தது.

இந்நிலையில், தோல்விக்கு குறித்து தோனி கூறியவை, நாங்கள் இந்த மைதானத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட மைதானம், இருப்பினும் இப்படி மோசமாக ஆடியது ஏற்றுக்கொள்ளப்படாது.

எங்களது பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக ஆடினார்கள். ஆனால், அவர்கள் தலைசிறந்த வீரர்கள் என்பதும், கடந்த முறை கோப்பையை வெல்ல உதவியவர்கள் இவர்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என கூறினார்.