குடிபோதை தலைக்கேறி, ஹோட்டல் கார்டனில் ஆடுகளம் நாயகி செய்த ரகளை!!

தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் டாப்ஸி.

இவர் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் இணைந்து பிங்க் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமாகி தக்க இடத்தை பிடித்தார். மேலும் இவருகனவே ஏரளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் டாப்ஸி தற்பொழுது அக்ஷய் குமாருடன் இணைந்து மிஷன் மங்கள் என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நடிகர் விக்கி கௌஷல் உடன் இணைந்து டாப்ஸி மன்மர்ஜியான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் wrap-up பார்ட்டி நடந்துள்ளது. அதில் அளவுக்கு அதிகமாக குடித்த டாப்ஸி போதையில் பெரும் ரகளையில் ஈடுபட்டார். அதாவது போதை தலைக்கேறிய அவர் அந்த ஹோட்டலின் கார்டன் பகுதியிலேயே படுத்துள்ளார்

அதுமட்டுமல்ல, இன்று இரவு இங்கு தான் தூங்க போகிறேன் என கூறி கலாட்டா செய்துள்ளார். அதனை தொடர்ந்து விக்கி கௌஷல் கெஞ்சிக் கூத்தாடி ஹோட்டல் அறைக்கு டாப்ஸியை அனுப்பி படுக்க வைத்துள்ளார்.
இதனை டாப்ஸி மற்றும் விக்கி கௌஷல் இருவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.