காதலியுடன் ஊர் சுற்ற இளைஞன் செய்த தில்லாலங்கடி திருட்டு வேலை.!

புதுச்சேரி அடுத்த மூலக்குளம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் கடந்த 5 ஆண்டுகளாக குண்டுசாலை பகுதியில் அமுதா என்ற பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டு நேற்று இரவு கடையை திறந்துள்ளார் .அப்போது பேக்கரியின் மேல்கூரை பிரிக்கப்பட்டு, பேக்கரியில் வைக்கப்பட்ட எல்லா பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடையில் 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணமும், 2 பவுன் தங்க காசும் திருடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க்கும் திருடப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது

இந்நிலையில் பேக்கரிக்கு எதிரே பழக்கடை மதியழகன் என்பவர் திடீரென ஆடம்பரமான பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் பேக்கரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் தனது காதலியை வெளியே அழைத்துச் செல்ல பேக்கரியில் பணம் திருடி புதிய பைக் வாங்கியதாகவும், தனது காதலியை மகிழ்விக்க அன்பளிப்பாக தங்க செயின் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியழகனை கைது செய்த போலீசார் பைக் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.