வங்கியொன்றில் கொள்ளை; இருவர் கைது!

தெய்யந்தர – அதபத்துகந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளைச் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்களில் வந்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி குறித்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.