மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தினை அரசு பொறுப்பேற்க வேண்டும் – காவிந்த ஜயவர்தன

மட்டக்களப்பு – புனானை பகுதியில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை (Batticaloa Campus) அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தனிநபர் பிரேரணை ஒன்றினை இன்று சமர்ப்பித்துள்ளார்.

குறித்த பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரிடம் கையளித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மதங்களுக்கிடையிலான வேறுபாடு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவற்றுடன் ஷரியா சட்டம் நாட்டு மக்களிடையே தற்போது பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த ஷரியா சட்டத்தைக் கற்பிக்கும் பல்கலைக்கழகமானது நாட்டின் அமைதியை சீர்குலைக்கக்கூடும் எனவும் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை,மட்டக்களப்பு மாவட்டத்தில் 4300 கோடி பெறுமதியுள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களில் 90 வீதமான சொத்துக்கள் ஹிஸ்புல்லாவின் மகனின் பெயரில் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.