பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் குண்டுவெடிப்பு?

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியின் கடற்கரை பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் இன்று பகல் பதற்ற நிலமையேற்பட்டது.

எமது பிராந்திய செய்தியாளர் இதனை தெரிவித்தார். பெரியகல்லாறு கடற்கரையில் இன்று பகல் பாரிய சத்ததுடன் குண்டுவெடித்துள்ளது.

குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் குறித்த கடற்கரை பகுதிக்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் குறித்த குண்டுவெடிப்பானது விசேட அதிரடிப்படை முகாமில் இருந்த பழைய குண்டு ஒன்று செயலிழக்கச்செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

குறித்த குண்டுவெடிப்பு காரணமாக அப்பகுதியில் மக்கள் மத்தியில் பதற்ற நிலமையேற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.