சச்சினுக்கு ஷேவ் செய்த இளம் பெண்..

சமீபத்தில், சச்சின் தன் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இளம் பெண் ஒருவர் சச்சினுக்கு ஷேவ் செய்துவிடும் புகைப்படம் அது. சச்சின் நினைத்தால், வீட்டுக்கே வந்து ஷேவ் செய்ய எவ்வளவு பேரோ தயாராக இருப்பார்கள். மாறாக அவரே நேரடியாக அந்த கடைக்கு சென்று இளம் பெண்ணிடம் ஷேவ் செய்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சச்சின் நிகழ்த்திய புதிய சாதனை

சச்சினின் இன்ஸ்டா பதிவு, ”இதற்கு முன் இப்படி ஒரு அனுபவத்தை நான் பெற்றதில்லை. இன்றைய தினத்தில், இந்த சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. சலூன் கடைகளில் பணிபுரியும் பெண்கள், எத்தனை மரியாதைக்குரியவர்கள்… கனவுகளில் எந்த பேதமுமில்லை ” என்று கூறியிருந்தார். ராக்கெட் ஓட்டுவது, கப்பல் இயக்குவதைப் போல சவரம் செய்வதும் கடினமான பணிதான். அதிலும் பெண்கள் புகுந்திருப்பதை வரவேற்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

சச்சினின் பதிவு இன்ஸ்டராகிராமில் உருக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ”சச்சின், எப்போதும் சமுதாயத்துக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளையே கூறிவருகிறாய். சமுதாயத்துக்கு சிறந்த பணிகளையும் ஆற்றுகிறாய்… எனக்கும் ஒரு கனவு உண்டு. அது, உன்னைச் சந்திப்பது. அந்த நாளும் ஒருநாள் வரும்” என்றது ஒரு பதிவு. ”சச்சின், இப்போதும் ரெக்கார்டுகளைத் தகர்த்துக்கொண்டிருக்கிறார் ” என்று சொன்னது மற்றொரு பதிவு.

இந்நிலையில் சச்சின் இளம் பெண்ணிடம் காட்டிய பரிவு, சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது.