மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைக் தொடர்ந்து பாடசாலைகயின் இரண்டாம் தவணைக்கான கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நாளையதினம் குறிப்பிட்ட வகுப்பினருக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தற்போது நிலவுகின்றன.

அந்த வகையில் கல்வி அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பல பாடசாலைகளில் இன்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.