அதிமுகவின் முன்னணி தலைவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.?

அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது இதனைத் தொடா்ந்து அவா் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தொிவித்துள்ளனா்

மேலும் மதுசூதனின் உடல் நிலை தொடா்ந்து கவனிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவா்கள் தொிவித்துள்ளனா். அதிமுகவின் மூத்த தலைவா்களுல் ஒருவரான மதுசூதனனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்த அதிமுகவின் முக்கிய தலைவா்கள் பலரும் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனா்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் ஓ.பன்னீா்செல்வம், தா்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவு தொிவித்த மிக முக்கிய தலைவா்களில் ஒருவராக மதுசூதனன் இருந்தாா். மேலும் ஜெயலலிதாவின் இறந்த பின்பு நடந்த ஆா்.கே.நகா் இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மதுசூதனன் டிடிவி தினகரனிடம் தோல்வியை தழுவினாா் என்பது குறிப்பிடத்தக்கது.