சவூதியில் பொலிஸாரிடம் வசமாகச் சிக்கிய சஹ்ரானின் மைத்துனர்…!!

கொழும்பில் தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.மௌலான ரீலா என்பவர் சவுதி அரேபியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மௌலானா ரீலா மற்றும் போலிப் பெயரில் சவுதியில் தஞ்சமடைந்த அவருக்கு நெருக்கமான இன்னொருவரையும் சவுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்திய புலனாய்வு பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல், இந்தியாவின் கேரள பிராந்தியம் மற்றும் தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கள் அதிகாரிகள் குழுவொன்றை விசாரணைக்காக சவுதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.