“எனக்கு பசிக்கலமா சாப்பாடு வேண்டாம்” என்கிறதா உங்கள் குழந்தை?

குழந்தைகளுக்கு அதிகம் பசிக்காமல், சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த பிரண்டை துவையலை சுவையாக செய்து கொடுத்தால் போதும். செரிமானம் நன்றாக ஏற்பட்டு அதீத பசி எடுக்கும்.

தீராத வாயுத்தொல்லை மற்றும் அஜீரண பிரச்சனையில் கடும் அவதியடையும் நபர்கள் உணவில் அடிக்கடி பிரண்டையை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலமாக அஜீரண கோளாறுகள் சரி செய்யப்பட்டு., நிம்மதியான வாழ்க்கையை வாழ துவங்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொழுந்து பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி.,
இஞ்சி – சிறிதளவு.,
புளி – சிறியளவு.,
உளுத்தம்பருப்பு – 4 தே.கரண்டி.,
காய்ந்த மிளகாய் – 2 எண்ணம்.,
கறிவேப்பிலை – சிறிதளவு. ,
நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி.,
உப்பு – தேவையான அளவு..

செய்முறை:

எடுத்துக்கொண்ட பிரண்டையை நார் உரித்து சிறிசிறிதாக நறுக்கி கொண்டு., வானெலியில் எண்ணையை ஊற்றி வதக்க வேண்டும். பின்னர் அதில் இஞ்சி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.

காய்ந்த மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பை சேர்ந்து தனித்தனியாக வறுத்தெடுத்து உப்பை சேர்த்து அரைத்துக்கொண்டு., புளி மற்றும் கறிவேப்பில்லை., இஞ்சி., பிரண்டையுடன் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அனைத்தையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ அரைத்தால் நன்றாக இருக்கும். இப்போது பிரண்டை துவையலை கடுகு இட்டு தாளித்து சாப்பிட விரும்புபவர்கள் தாளித்து சாப்பிடலாம்.