கடிதங்களுடன் மூவர் கைது!

ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு இன முறுகலை ஏற்படுத்தக் கூடிய சொற்கள் அடங்கிய கடிதங்களுடன் மூவர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் செயற்குழு உறுப்பினர் எனவும் அவர்களிடமிருந்து மேற்குறிப்பிட்ட 600 கடிதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.