1 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த சிறுவன்: காரணம்???

டெல்லியில் பழிக்குப்பழி வாங்குவதற்காக ஒன்றரை வயது குழந்தையை 8 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஒன்றரை வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மாயமாகியிருக்கிறது.

உடனே அந்த குழந்தையின் தாய் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளார்.

வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள கால்வாயில் அந்த குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் வலது கண், வயிறு மற்றும் கால் மீது அதிக காயங்கள் இருந்துள்ளன.

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரிக்கையில் பக்கத்து வீட்டை சேர்ந்த 8 வயது சிறுவன் மாயமாகியிருப்பது தெரியவந்தது. அந்த சிறுவனை தேடும்பொழுது அருகாமையில் உள்ள பூங்கா ஒன்றில் படுத்து கிடந்துள்ளான்.

அந்த சிறுவனை அழைத்து ஆலோசனை வழங்கியுள்ளனர். அப்போது அந்த சிறுவன், கொல்லப்பட்ட குழந்தையின் சகோதரி தன்னை தாக்கியதாகவும், அதில் காயம் ஏற்பட்டதால் இரண்டு குடும்பத்தாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.

மேலும் இதற்கு பழிவாங்கும் விதத்தில் உறங்கி கொண்டிருந்த குழந்தையை வீட்டிலிருந்து கடத்தி வந்து கால்வாய் நீரில் வீசி எறிந்துள்ளான். பின்னர் தொடர்ந்து கற்களை கொண்டு தாக்கியதாக கூறியுள்ளான்