உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் என்ன நடந்தது தெரியுமா?.

உலகில் மிகவும் உயரமான சிகரமாக பல காலம் இந்த சாதனையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பது எவரெஸ்ட் சிகரம். பல நாட்டு மலையேற்ற வீரர்களின் கனவாக இருப்பது இந்த எப்படியாது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தங்கள் தேசக் கொடியை நடவேண்டும் என்பதுதான்.

ஆனால் அப்படி செல்வோரால் அங்கு டென்ட் அமைக்கப்பட்டும், பல உணவுபொருட்களை கொண்டு சென்ற நெகிழிகள் இறைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை சுத்தம் செய்யும் பொருட்டு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைபடுத்து பணியில் நேபாளத்தில் உள்ள தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த தூய்மை இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் நேபாள புத்தாண்டை ஒட்டி இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக்குழுவால் சமீபத்தில் 3000 கிலோ வகையிலான குப்பைகள் எவெரெஸ்ட் சிகரத்திலிருந்து அகற்றப்படுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன