மணமேடையில் மொபைல் போனை வைத்து மாப்பிள்ளை செய்த செயல்..

இன்று நாம் எங்கு சென்றாலும் நம் காதில் ஒலிப்பது பப்ஜி என்னும் ஒற்றைச் சொல் தான். சமீப ஆண்டுகளாக கையில் ஆன்ரைடு போன்ற ஸ்மார்ட் போன்களின் தாக்கம் மாபெரும் புரட்சியை செய்துள்ளது என்றால் அவற்றிற்குள்ளேயே நடைபெற்று வரும் புரட்சி தான் இந்த பப்ஜி விளையாட்டு.

ஸ்மார்ட் போன் இல்லாமல் யாரும் இல்லை, இன்று அந்த ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் விளையாடப்பட்டு வரும் இந்த பப்ஜி கேம் குறித்த உண்மையான தகவலும், இதனை உருவாக்கியவர் குறித்த விசயமும் வியப்படையச் செய்கிறது.

இந்த நிலையில் இந்த விளையாட்டு எந்த அளவுக்கு ஒருவரை அடிமையாக்கும் என்பதற்கு உதராணமாக, ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, திருமண மேடையில் மாப்பிள்ளை அமர்ந்துகொண்டு இந்த பப்ஜி கேமை விளையாடிக்கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஒருவர் மணமக்களை வாழ்த்தி, அன்பளிப்பு பெட்டகம் ஒன்றை கொடுக்கிறார். ஆனால் அதை வாங்க மறுத்து, கீழே தள்ளிவிட்டு தொடர்ந்து அவர் பப்ஜி விளையாடுகிறார்.

இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.