கனடாவில் இளம் பெண் ஒருவரும் அவரது மகளும் காணாமல் போயுள்ளார்..பொலிஸ் தீவிர விசாரணை..!!!

கனடாவில் இளம் பெண் ஒருவரும் அவரது மகளும் காணாமல் போயுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

25 வயதான Jasmine Lovett மற்றும் அவரது மகள் Aliyah Sanderson ஆகிய இருவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தனர்.

அதற்கு முந்தைய தினம் அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரான Robert Leeming உடன் வெளியே சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாங்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதாகவும், பின்னர் தான் ஒரு வேலையாக சென்று திரும்பியபோது JasmineI யும் அவரது மகள் Aliyahit யும் காணவில்லை என Robert தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள Robert இடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காணாமல் போயுள்ள 25 வயதான Jasmine Lovett மற்றும் அவரது மகள் Aliyah Sanderson ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.