கிரீன் டீ பற்றி இதுவரை உங்களுக்கு தெரிந்திராத ரகசியம்…

காலை மற்றும் மாலை வேளைகளில் உடலும் மனமும் உற்சாகமடைய அருந்துவதற்கு பல பானங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தேநீர். அதில் ஒரு வகை தான் கிரீன் அதில் தேயிலைகளை அதிகம் ரசாயன முறையில் பதப்படுத்தாமல், இயற்கையான குணங்கள் நீங்காமல் தயாரிக்கப்படுகிறது இந்த கிரீன் டீ இலைகள். சூடான நீரில் கிரீன் டீ தூளை போட்டு, சர்க்கரை கூட கலந்து கொள்ளாமல் கிரீன் டீ பருகுவதே சிறந்தது. இந்த கிரீன் டீ தயாரிப்பது எப்படி, குடிக்கும் முறை மற்றும் கிரீன் டீ அருந்துவதால் கிடைக்கும் மருத்துவ பயன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ தயாரிப்பது எப்படி :

கிரீன் டீ பவுடரை பல பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக கிரீன் டீ இலைகளை வாங்குவதே சிறந்தது. கிரீன் டீ இலைகளை நீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இலைகளை அருந்துவது நல்லது.

கிரீன் டீ குடிக்கும் முறை

நமக்கு தேவையான போதெல்லாம் க்ரீன் டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முறை க்ரீன் டீ குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் குடிக்கலாம். குடிக்க கூடாது. அப்படி குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு உண்ட பிறகு 30 – 40 நிமிடங்கள் கழித்து க்ரீன் டீ குடிப்பதே நல்லது. அதே போல இரவு உறங்குவதற்கு முன்பு க்ரீன் டீ குடித்துவிட்டு உரக்கச் செல்ல கூடாது

கிரீன் டீ-யின் நன்மைகள்
எடை குறைவு

க்ரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்று தான் எடை குறைய உதவும் என்பது. இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட க்ரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன.

கொழுப்பு குறைவு

கேட்டசின்கள் என்பது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள். இவை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைத் தடுக்கும். க்ரீன் டீயில் கேட்டசின், கேலோகேட்டசின், எபிகேட்டசின், எபிகேலோகேட்டசின், எபிகேட்டசின் கேலேட் போன்ற பொருட்கள் உள்ளன. அத்துடன் க்ரீன் டீயில் மிகவும் சுறுசுறுப்பான எபிகேலோகேட்டசின்-3-கேலேட் அதிகம் உள்ளது.

கலோரி எரிப்பு

க்ரீன் டீயில் எடையைக் குறைக்க உறுதுணையாக இருக்கும் மற்றொரு ஊட்டச்சத்தான காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் கொழுப்பைக் குறைப்பதோடு, கலோரிகளையும் குறைக்கும்.

சிறந்த டயட்

ஒரு கப் க்ரின் டீயில் 30-50 மிகி காப்ஃபைன் உள்ளது. க்ரீன் டீ எடையைக் குறைக்கும் என ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக குடித்தால், பக்கவிளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை அளவாக தினமும் கப் என குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக க்ரீன் டீயை சொல்லலாம்.

புற்றுநோய்

சில ஆய்வுகளில் எபிகேலோகேட்டசின்-3-கேலேட்டிற்கு, உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

நோயெதிர்ப்பு மண்டலம்

க்ரீன் டீயில் உள்ள L-தியனைன், அதைக் குடிப்பதால் உண்டாக்கும் பக்கவிளைவுகளைத் தடுக்கும். இந்த அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.

உடல் ஆற்றல்

வெறும் வயிற்றில் க்ரீன் டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரித்து மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களை கரையச் செய்து, உடல் எடை குறைய வழிவகுக்கும்.

வாய் துர்நாற்றம்

க்ரீன் டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

சொத்தை பல்

ஒருவர் தினமும் ஒரு கப் க்ரீன் டீயைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அவர்களுக்கு சொத்தைப் பல் வரும் அபாயம் குறையும். இதற்கு அதில் உள்ள பாலிஃபீனால்கள் மற்றும் ப்ளூரைடு தான் முக்கிய காரணம்.

சர்க்கரை நோய்

க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும். கொரியன் ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயை குடிப்பதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் 33% குறைவாக தெரிய வந்துள்ளது

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், க்ரீன் டீயை குடித்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலை சிக்கென்று ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், அன்றாடம் க்ரீன் டீயைக் குடித்து வர, அது இரத்த அழுத்த பிரச்சனையைத் தடுப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம்

க்ரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், அது இதய நோய் வரும் அபாயத்தைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே இதய நோயின்றி வாழ க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆர்த்ரிடிஸ்

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுகளின் உற்பத்தியைத் தடுத்து, உடலினுள் ஏற்படும் காயங்கள் மற்றும் ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஆகவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் க்ரீன் டீ குடியுங்கள்.

மூளை ஆரோக்கியம்

க்ரீன் டீயில் காப்ஃபைனுடன், L-தியனைன் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு குறைந்தது 6 கப் க்ரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என தெரிய வந்துள்ளது.

யரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது?
  • இதய நோய், அல்சர், உளவியல் கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.
  • அதோடு ஹீமோதெரபி, ஆன்டிபயாடிக்ஸ், இரத்தத்தை மெலியச் செய்யும் மருந்துகளை உட்கொள்பவர்களும், க்ரீன் டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.