கர்ப்பிணிகளுக்கு சிவப்பு, பச்சை வளையல்களை அணிவிப்பது ஏன் தெரியுமா…?

நிறை மாத கர்ப்பிணிகளுக்கு சிவப்பு, பச்சை வளையல்களை ஏன் அணிவிக்கிறார்கள் தெரியுமா..?ஆபரணங்கள் என்றாலே அவை பெண்களுக்கானவை என்றாகிவிட்டது .

ஆனால் அவை வெறும் அழகுக்காக மட்டுமே அல்ல. அவை ஒவ்வொன்றின் பின்னணியிலும் சில முக்கிய காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

பெண்கள் கைகளில் வளையல் அணிவதை விரும்புகின்றனர். வளையல்களில் மிகவும் உன்னதமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்க கூடியது கண்ணாடி வளையல் தான்.

பொதுவாக கண்ணாடி வளையல்களை இந்த காலத்துப் பெண்கள் விரும்பி அயிவதில்லை.

ஆனால் நம்முடைய பாரம்பரியத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு, போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் .

இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல்கள் போட்டுவிடுவது தான். கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பதுடன் வீட்டுக்கு வந்தவர்களுக்கும் கண்ணாடி வளையல்கள் கொடுப்பது வழக்கம்.

அதுவும் கர்ப்பமடைந்த ஏழாம் மற்றும் ஒன்பதாம் மாதங்களில் தான் இந்த வளையல்கள் அணிவிக்கப்படும். இதற்குக் காரணம் நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள்.

அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.

கங்கன் எனப்படும் வளையல், கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும். பழங்காலம் முதல் வளையல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட்கள் கொண்டு செய்யப்பட்டு வந்துள்ளது.

உடைந்த வளையல் கூடாது கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது.

ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது என்பதே அதற்குக் காரணம்.கர்ப்பிணிப் பெண்களுக்கு குறிப்பாக ஏன் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் வளையல்கள் அணிவிக்கப்படுகின்றன.

பச்சை நிற வளையல் சக்தி தேவியின் தத்துவம். இதை அணிவதன் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது.

அது அந்தப் பெண்ணின் கற்புத்திறத்தையும் பாதுகாக்கிறது.கெட்டதை அழிக்கும் சக்தியையும் நேர்முறை ஆற்றல்களை அதிகம் கிரகித்துக் கொள்ளக் கூடிய சக்தியும் கொண்டது.

சில ஜிகினா வேலைப்பாடுகள் உள்ள பச்சை, சிவப்புநிற வளையல்களில் தெய்வீக அதிர்வலைகளை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

சாதாரண வேலைப்பாடுகள் கொண்ட பச்சை மற்றும் சிவப்பு நிற வளையல்கள் அணிவதே சிறந்தது