16 வயது சிறுவனை உயிருடன் புதைத்த பெற்றோர்…

ரஜினியின் ஒரு படத்தில் வரும் கிளைமாக்ஸில் அவரை ஜீவ சமாதி செய்வார்கள். அதுபோல் திருவண்ணாமலையில் 16 வயது சிறுவனை பெற்றோர் ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்பகத்தோப்பு ராமாராதபுரம். இங்கு வசிப்பவர் ஆஹரிகிருஷ்ணன். இவர் ஒரு ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரது மகன் நாராயணன்(16) சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால் அவனால் பள்ளியில் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இப்படியிருக்க, சமீபத்தில் தனது வீட்டுல் உள்ளா கிணற்றின் அருகில் சிறுவன் நின்றிருந்த போது, வலிப்பு வந்து தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். பின்னர் தீயணைப்புத்துறையினர் வந்துசிறுவனை மீட்டனர். அப்போது சிறுவனுக்குத் தலையில் அடிப்பட்டிருந்தது. 108 ல் அவசர ஊர்தியில் வந்தவர்கள் சிறுவனை பரிசோதித்துப் பார்த்து அவன் இறந்ததாகக் கூறிவிட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் வந்த ஒரு சாமியார், நாராயணனின் நாடியைப் பரிசோதித்துவிட்டு உயிர் உள்ளதாகக் கூறினார். பின்னர் இவனை ஜீவ சமாதி செய்ய வேண்டும் கூறியுள்ளார்.

இதை ஏற்று சிறுவனின் பெற்றோரும் அவனை ஜீவசமாதி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்டுத்தியுள்ளது.

நாடி உள்ளது என்று தெரிந்ததும் சிறுவனை காப்பாற்ற மருந்துவனைக்குக் கொண்டு செல்லாதது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.