வெடிகுண்டு தாக்குதலை கண்டிக்கிறோம்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கண்டனம்!

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக – ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தோம். மனிதாபிமானமற்ற முறையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை. தாக்குதல்களில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.