வட இந்தியாவில் செம்ம மாஸ் காட்டிய பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பை தான் பெற்றது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் உலகம் முழுவதும் பல நாடுகளில் பல விருதுகளை பெற்றுக்கொண்டே தான் வருகின்றது, ஆனால், வட இந்தியாவில் ஒரு விருது பெறுவது சாதரண விஷயமில்லை.

ஆம், பரியேறும் பெருமாள் சமீபத்தில் வட இந்தியாவில் நடந்த பிரபலமான விருது விழாவில் சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதை அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் மாரி செல்வராஜுக்கு வழங்கினார்.