முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து இடங்களிலும் இந்த நிகழ்ச்சி ஹிட் தான்.

இந்நிகழ்ச்சியை தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் நானி தொகுத்து வழங்கினார்கள்.

தற்போது தெலுங்கில் பிக்பாஸை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அதற்காக அவருக்கு பெரிய தொகை பேச, இதற்கு அனுஷ்கா சம்மதித்தால், இந்தியாவிலேயே முதன் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகையாக இவர் இருப்பார்.