சினிமாவை விட்டுவிட்டு போன பிரபல நடிகை மீண்டும் எடுத்த அதிரடி முடிவு!

கல்லுக்குள் ஈரம் படம் மூலம் படம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விஜய் சாந்தி. தமிழில் சில நடிகர்களுடன் முக்கிய படங்களில் நடித்திருந்தார். ஆனால் தெலுங்கில் தான் அதிகமான படங்களில் நடித்ததோடு தேசிய விருது, நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது என பல முறை பெற்றுள்ளார்.

கடைசியாக தமிழ் 2003 ல் பண்ணாரி அம்மன் படத்திலும் 2006 ல் தெலுங்கில் நாயுடம்மா படத்திலும் நடித்திருந்தார். அதன் பின் சினிமா படங்களில் நடிக்கவே இல்லை. பின் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் தெலுங்கில் மகேஷ் நடிக்கும் படத்தில் அவர் முக்கியவேடத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. இதனை தற்போது படக்குழு உறுதி செய்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.