இதயத்தை நொறுக்கும் தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!

இதயத்தை நொறுக்கும் இலங்கை தேவாலய கொடூர தாக்குதல் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது. இதன் பின்னணியில் உள்ள மதவெறி – இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.