நடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் நடந்த நிச்சயதார்த்தம்..

நடிகர் மகத்துக்கும் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மகத்தும், மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வருகின்றனர். மகத் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்ற இடத்தில் அவருக்கு யாஷிகா மீது ஃபீலிங் வர பிராச்சிக்கு கோபம் வந்துவிட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பிராச்சியிடம் பேசி, சமாதானம் செய்து காதலை புதுப்பித்தார் மகத்.

மகத்துக்கும், பிராச்சிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

நிச்சயதார்த்தம் நடந்தபோதிலும் இன்னும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. பிராச்சி துபாயில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆவாரா என்று தெரியவில்லை.

நிச்சயதார்த்தம் பற்றி மகத் போட்ட ட்வீட்டை பார்த்த பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.