பாலிவுட்டின் கனவு நாயகி அலியா பட்டின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா ???

பாலிவுட்டின் கனவு நாயகியாக வலம் வரும் அலியா பட்டின் அழகின் ரகசியம்யாருக்காவது தெரியுமா ? அவருடைய அழகின் ரகசியத்திற்கு முக்கிய காரணங்கள் உள்ளது.

  1. எதை மிஸ் பண்ணினாலும் தினமும் சரியான நேரத்தில் தூங்குவது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேர உறக்கம் கொள்வது மிகச்சிறந்த ஒன்று.

அப்பொழுதுதான் இரவு தூக்கத்தின் போது இறந்த செல்கள் வெளியேறி, புது செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மேலும் புது செல்கள் உண்டாக நல்ல உறக்கமும் வேண்டும் அல்லவா..?

  1. சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்து விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி. சூரிய வெப்பத்தில் இருந்து நம்முடைய சருமத்தை பாதுகாத்து கொள்ள விட்டமின் ஏ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

மேலும் சருமத்திற்கு மிக முக்கியமான கொலாஜன் உருவாவதற்கு விட்டமின் c மிக முக்கியம். விட்டமின் சி ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு சருமத்தை பாதுகாத்து கொள்கிறது.

  1. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. அப்போது தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி நம்முடைய சருமம் பளபளப்பாக காணப்படும்.
  2. மேக்கப் போட்டு விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பிய பின் உடனடியாக மேக்கப்பை அகற்ற வேண்டும்.

அதிலும் நேச்சுரலாக இயற்கையாகக் கிடைக்கக்கூடிய எண்ணெய் மற்றும் இயற்கையாகவே மேக்கப்பை அகற்றுவது நல்லது.

  1. அடுத்ததாக ஐஸ்: முகப்பரு வராமல் இருப்பதற்காக ஐஸ் கட்டியை பயன்படுத்தினால், பிம்பில்ஸ் தொல்லையே இருக்காது.

மேற்குறிப்பிட்ட விஷயங்களைத்தான் நடிகை ஆலியா பட் மேற்கொண்டு வருகிறாராம். இவருடைய அழகின் ரகசியம் இதுதானாம்.