நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் 30 கோடி க்கு விலைபோனது..!!

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய்க்கு விலைபோய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதற்கமைய படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில், இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் இன்னும் 50 நாட்கள் நடைபெறவுள்ளன.

அதேநேரம் படத்திற்கான புரமோஷன்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது. இறுதிக்கட்ட காட்சிகளுக்காக சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கின்றார். இதில் நடிகர் கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் விவேக், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

விளையாட்டுத்துறையில் நடக்கும் ஊழல்கள், ஜாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவற்றை மையப்படுத்திய கால்பந்தாட்ட கதையாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கின்றார். முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கின்றார்.