ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறங்க.. மக்கள் ஆதரவிருக்கிறதா.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக மீண்டு களமிறக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாவின் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக அறியமுடிகின்றது.

புதுவருட பிறப்புக்கு முன்னர் அலரி மாளிகையில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, சஜித் பிரேமதாச உட்பட்ட பலருடன் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து பேசிக் கொண்டிருந்தார் பிரதமர் ரணில். அப்போது அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, மீண்டும் ஜனாதிபதி மைத்திரியை பொதுவேட்பாளராக்கினால் ஜனாதிபதித் தேர்தலையடுத்து பழைய கசப்பான சம்பவங்களை மறந்து பரஸ்பரம் ஒன்றாக செயற்படலாமென கூறியுள்ளார்.

அத்துடன் ராஜபக்ச முகாமில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இழுபறி நிலைமை உள்ளதாகவும் இப்படி செய்யும் பட்சத்தில் அதன் நன்மைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் வருமென்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் சஜித் இப்படி சொன்ன கையோடு, ரணில் கடுப்பாக அதை நிராகரித்துள்ளார்.

பொதுவேட்பாளராக போட்டியிடுமளவுக்கு மைத்ரிக்கு மக்களிடத்தில் செல்வாக்கு இருக்கிறதா என்றும் சஜித்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.