இந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்!

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த திகதியை வைத்து பொருத்தம் பார்த்து, எந்த திகதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.

1, 10, 19, 28- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 3, 4, 5, 6, 8 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். இவர்கள் 1-ம் எண்ணில் பிறந்த பெண்களை தவிர்ப்பது நல்லது.

மேலும் இவர்களுடைய திருமணத் திகதி 1, 10, 19, 28, 6, 15, 24 ஆகிய திகதிகளிலும், கூட்டு எண் 1 அல்லது 6 போன்ற திகதிகளில் கூட திருமணம் செய்து கொள்வது நல்லது.

2, 11, 20, 29- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 1, 3, 5, 6, 7 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் திருமணம் செய்யக் கூடாது.

இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16, 25 ஆகிய திகதிகளிலும், மற்றும் 1, 6, 7 ஆகிய எண்கள் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் திருமணம் செய்து கொள்வது நல்லது.

3, 12, 21, 30- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 2, 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.

4, 13, 22, 31- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 1, 5, 6, 8ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண் வரும் திகதிகளில் வைத்துக் கொள்வது சிறப்பு.

5, 14, 23- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 1, 2, 3, 6 பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். இவர்கள் திருமணம் செய்வதற்கு 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய திகதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் திகதிகளும் உகந்தவை ஆகும்.

6, 15, 24- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 6, 9 எண்களில் பிறந்த பெண்ணை மணந்து கொண்டால், நல்ல திருமண வாழ்க்கை அமையும். 1, 4, 5, 3 ம் எண்ணில் பிறந்த பெண்ணை மணக்கக் கூடாது.

மேலும் இவர்களின் திருமணத் திகதி 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய திகதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் திகதிகளிலும் செய்து கொள்வது மிகுந்த நன்மை கிடைக்கும்.

7, 16, 25- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும். இவர்கள் 8-ம் திகதி பிறந்தவர்களை மணக்கக் கூடாது. இவர்கள் திருமணம் செய்து கொள்ளும் நாட்களின் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது.

8, 17, 26- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்கள் 1, 4 ஆகிய திகதிகளில் பிறந்த பெண்களே ஏற்றவர்கள். ஆனால் இவர்கள் 8-ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக் கூடாது.

2, 7 ஆகிய கூட்டு எண் வரும் பெண்களைத் தவிர்த்து விடுவது நல்லது. இவர்கள் கூட்டு எண் 1, 6 வரும் திகதிகளில் திருமணம் செய்து கொள்வது மிகவும் நல்லது.

9, 18, 27- ம் திகதியில் பிறந்தவர்கள்
இவர்களுடைய நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும்.

இவர்கள் கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக் கூடாது. இவர்களின் திருமணத் திகதி கூட்டு எண் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும்.