முறிந்தது கூட்டணி.!! கழட்டி விடப்பட்ட காங்கிரஸ்.!

காங்கிரஸ் – ஆம் ஆத்மீ கட்சிகளுக்கு இடையே கூட்டணிபேச்சுவார்த்தை நடைப்பெற்று உறுதியாகும் என்று எதிர்பார்த்தநிலையில், திடீர் திருப்பமாக இந்த கூட்டணி முறிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மீ கட்சி, வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே, ஆம் ஆத்மீ டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டெல்லியில் பாஜக-வை எதிர்த்து 4 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாகவோ, மற்ற மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மீ கட்சியை வெற்றி வைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளதாகவும் தெரிகிறது. அதே சமயத்தில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மீ கட்சி போட்டியிடுவதால் அக்கட்சி மாற்றம் செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பாஜகவை வீழ்த்த இந்த தந்திரத்தை வேறு வழியில்லாமல் கையாண்டு உள்ளது. மேலும் நாம் ரெண்டுபட்டால், வாக்குகள் பிரிந்து, பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது என்ற காரணத்தினால் காங்கிரஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. எப்படி பார்த்தாலும் இது காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி என்று தான் கூற முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.