மீனவப் படகிற்கு தீ மூட்டிய சந்தேக நபர் கைது

மீனவர் படகு ஒன்றிற்கு தீமூட்டி எரித்த குற்றத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் நேற்று பிற்பகல் மீனவர் ஒருவருடைய படகு ஒன்றும் பெறுமதியான வலைகளும் அடையாளம் தெரியாதோரால் தீமுட்டி எரித்து நாசமாக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது