பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது அழகிய காதல் மனைவியை கொலை செய்துள்ளார்…!!

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் சிறையில் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் கெவின் ஸ்மிதம் (51). இவர் தாய்லாந்தை சேர்ந்த கண்ட்ரா (29) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தில் கண்ட்ரா குடும்பத்தாருடன் கடந்தாண்டு ஏப்ரலில் கெவின் வசித்து வந்தார்.

அப்போது கணவனும், மனைவியும் சேர்ந்து நள்ளிரவு வரை ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் கண்ட்ராவை கெவின் உறவுக்கு அழைத்த போது அவர் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கண்ட்ராவுக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த கெவின் அவர் கழுத்தை நெரித்தும், எட்டி உதைத்தும் கொலை செய்துள்ளார்.

பின்னர் நிர்வாண நிலையில் இருந்த கண்ட்ரா சடலத்தை வீட்டு வாசலில் போட்டுவிட்டு அதை போர்வையால் மூடியுள்ளார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார் கெவினை கைது செய்தனர்.

மனைவியை கொன்றதை கெவின் ஒப்பு கொண்ட நிலையில் தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சிறையில் கெவின் கண்டெடுக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார், இந்நிலையில் கெவின் உயிரிழந்தை சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனாலும் கெவினுக்கு எப்படி சிறையில் காயங்கள் ஏற்பட்டது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.